அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், செலான் தனது வதியாதோர் வெளிநாட்டு நாணய கணக்கு மற்றும் வதிவோர் வெளிநாட்டு நாணய கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வெகுமதித்திட்டத்தை (Thilina Sayura) மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
இதனூடாக வாடிக்கையாளர்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களின் போது பல வெகுமதிகளையும், உறுதியான பணக்கொடுப்பனவு அனுகூலங்களையும் வழங்க முன்வந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு, தனது Thilina Sayura வெகுமதித்திட்டத்தை மீளமைத்துள்ளது.இதனூடாக வங்கியியல் துறையில் NRFC மற்றும் RFC கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புடன் அவர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் முக்கியமான விடயங்களுக்கு சிறந்த வெகுமதிகளை வழங்க முன்வந்துள்ளது.
ஆகக்குறைந்தது US$ 500 அல்லது அதற்கு நிகரான ஏனைய ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிநாட்டு நாணயங்களில் NRFC, RFC சேமிப்புக்கணக்குகளை அல்லது நிலையான வைப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது பல்வேறு அனுகூலங்களை செலான் வெகுமதித்திட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். US$25,000 - $50,000 இடையிலான கணக்கு மீதியை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு இரவை இரு நபர்களுக்கு full-board அடிப்படையில் இலவசமாக தங்கியிருந்து அனுபவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதுபோன்று $50,000 க்கு மேல் தொகையை மீதியாக பேணும் வாடிக்கையாளர்களுக்கு இரு இரவுகளை தெரிவு செய்யப்பட்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரு நபர்களுக்கு full-board அடிப்படையில் இலவசமாக தங்கியிருந்து அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
செலான் வங்கியின் விசேட வெளிநாட்டு நாணய முதலீட்டு கணக்கில் Foreign Currency Investment Deposit Account (SFIDA) முதலீடு மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும். மேலும், NRFC & RFC கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் (SLBFE)அறவிடப்படும் கட்டணத்தில் 10000 ரூபா வரை வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்லும் போது சலுகையாக பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், Thilina Sayura கணக்குதாரர்களுக்கு தமது திருமணத்தின் போது 40000 ரூபாயை பெற்றுக்கொள்ள முடியும், குழந்தை பேறின் போது 35000 ரூபா மற்றும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் விழிவெண்படல சத்திரசிகிச்சையின் போது 25000 ரூபா மற்றும் சத்திரசிகிச்சை ஒன்றின் போது 100000 ரூபா வரை பணத்தை பெறவும் முடியும்.
தற்போது ஏனைய வங்கிகளில் பேணும் NRFC, RFC அல்லது நிலையான வைப்புகளை செலான் வங்கிக்கு மாற்றி, இந்த பிரத்தியேக அனுகூலங்களை அனுபவிக்க முடியும்.
இந்தச்சலுகை தொடர்பில் செலான் வங்கியின் சில்லறை வங்கியியல் பிரிவின் பதில் பொது முகாமையாளர் திலான் விஜயசேகர கருத்துத்தெரிவிக்கையில்,
“செலான் திலின சயுர நபர் ஒருவரின வாழ்க்கையில் இடம்பெறும் விசேட சம்பவங்களுக்கு வெகுமதியளிக்கும் வகையில் மாத்திரம் அமைந்திராமல், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச்செல்வோருக்கு பெறுமதியையும் சேமிப்பையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் வெவ்வேறு பிரிவுகளையும் வருமான மட்டங்களையும் புரிந்துகொண்டு, அவர்களின் விசேட நிகழ்வுகளில் சரியான உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையையும் கவனத்தில் கொண்டு, நாம் Thilina Sayura வடிவமைத்து, அவர்களுக்கு மேலதிக உதவிக்கரத்தை நீட்ட தீர்மானித்துள்ளோம்” என்றார்.
உலகின் எப்பகுதியிலிருந்தும் எந்தவொரு VISA அங்கிகாரம் பெற்ற ATM இயந்திரங்கள் ஊடாக தமது VISA டெபிட் அட்டையைக்கொண்டு வாடிக்கையாளர்கள் தமது NRFC/RFC கணக்குகளை அணுக முடியும் செலான் இணைய வங்கிச்சேவையினூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது கணக்கு மீதிகளை பரிசோதித்துக்கொள்ள முடியும் என்பதுடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வங்கிக்கான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் NRFC/RFC கணக்கின் மீதி ஆகியவற்றை ஏனைய வெளிநாட்டு நாணயமொன்றில் மேற்கொள்ள முடியும்.
மேலும், வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு வங்கியை எவ்வித செலவுகளுமின்றி தொடர்பு கொள்ளக்கூடிய வசதியை செலான் வங்கி ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது வங்கியுடன் WhatsApp ஹொட்லைன் +94772008888 ஊடாக தொடர்பு கொள்ள முடியும். www.seylan.lk எனும் இணையத்தளத்தினூடாக chat முகவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியும். செலான் வங்கி Facebook பக்கத்தினூடாக Facebook messenger bot மூலமாக chat செய்யலாம்.
இந்தப்பிரிவைச்சேர்ந்தவர்களுக்கு விசேட வீடமைப்பு கடன்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM