டிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்களை செலான் வங்கி, ஒக்டோபர் மாதம் முழுவதிலும் நாடாளாவிய ரீதியில் காணப்படும் தனது கிளைகளினூடாக முன்னெடுத்திருந்தது. 

இதனூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப்பழக்கத்தை நட்பான வகையில் ஊக்குவிப்பதற்கு தனது பங்களிப்பை வழங்கியிருந்தது.

டிக்கிரி மாத கொண்டாட்டங்கள் வங்கியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளைகளில் இடம்பெற்றன. 

செலான் வங்கியின் தும்மலசூரிய கிளை, டிக்கிரி மாதத்தை, புனித.அன்னம்மாள் முன்பள்ளியில் கொண்டாடியிருந்தது. ஒவ்வொரு

சிறுவருக்கும் உண்டியல்கள் பரிசளிக்கப்பட்டன. புனித அன்னம்மாள் முன்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தினசரி சேமித்து, ஒவ்வொரு மாதமும் வெகுமதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது. 

உண்டியல் விநியோகத்திற்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கு, தமது பெற்றோர்களுடன் மகிழ்ச்சியூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு அவர்களின் திறமைகளுக்கும் ஆளுமைகளுக்கும் விருதுகளை வழங்கியிருந்தது.

இதேவேளை, ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றுதிரண்டு வெவ்வேறான அணியாக, செலான் வங்கியின் ஹசலக கிளையின் கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தனர். 

6 முன்பள்ளிகளுடன் கைகோர்த்து சித்திரப்போட்டிகளுடன் டிக்கிரி மாதத்தை கொண்டாடியிருந்தனர். மேலும், மதவாச்சி கிளையின் மூலமாக, டிக்கிரி கானிவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சேமிப்புப்பழக்கத்தை தூண்டும் வெவ்வேறு வகையான செயற்பாடுகளில் பங்கேற்றனர்.