சர்ச்சைகளையடுத்து நுகேகொடை - அனுலா வித்தியாலயத்தின் அதிபர் கல்வி அமைச்சுக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் நிர்வாக முறைகேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளையடுத்தே இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, நிர்வாகப் பிரச்சினை மற்றும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் போன்ற சில விடயங்கள் தொடர்பில், கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.