கொழும்பு நாரேயன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வைத்திய தாதியாக கடமையாற்றும் தாதி ஒருவர் வைத்தியசாலை 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நாரேயன்பிட்ய பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.கே.டி.இராயரத்தின என்ற தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் உயிரிழந்த பெண் சம்பவதினமான நேற்று மாலை திடீரென 10 வது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக நாரேயன்பிட்டிய பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.