காளானை உண­வுடன் சேர்த்து உண்ட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 8 பேர், உணவு ஒவ்­வா­மை­யினால் இரத்த வாந்தி எடுத்து மயக்­க­முற்ற நிலையில் கந்­த­கெட்­டிய வைத்தியசாலையில்  அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். இவர்­களின் மூவரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக வைத்தியசாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்கின்றன.

இச்­சம்­பவம் கந்­த­கெட்­டிய பகு­தியின் புது­கே­கந்த என்ற கிரா­மத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்றுள்ளது. 

வீட்டுத் தோட்­டத்தில் இயற்­கை­யாக வளர்ந்­தி­ருந்த காளான்­களை உண­விற்கு சமைத்து உண்­ட­தை­ய­டுத்தே, மேற்­கு­றிப்­பிட்ட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இரத்த வாந்தி எடுத்து, மயக்­க­முற்­றுள்­ளனர்.

இவர்­களில் ஐவர் ஆரம்ப சிகிச்­சை­களைப் பெற்று வைத்தியசாலையை விட்டு வீடு திரும்­பினர். மேலும் மூவர் ஆபத்­தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இவர்கள் உண்ட காளான் உணவின் மாதி­ரிகள் வைத்­திய பரி­சோ­த­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளதுடன் கந்தகெட்டிய பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.