சர்­வ­தேச கடலில் பய­ணித்த கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கி தாம்  முன்­னெ­டுத்த வர்த்­தக நட­வ­டிக்கை கடற்­ப­டை­யி­னரால் பலாத்­கா­ர­மாக கைப்­பற்­றப்­பட்­டதால் ஏற்­பட்ட நஷ்டம் தொடர்பில் கடற்­படை தள­ப­தி­க­ளி­ட­மி­ருந்து 500 கோடி ரூபாவை நஷ்டஈடாக பெற்றுத் தரு­மாறு கோரி எவன்கார்ட் மெரிடைம்ஸ் நிறு­வனம் வழக்கு தாக்கல் செய்­துள்­ளது.

கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் நேற்று இந்த நஷ்டஈடு கோரும் வழக்கை அந் நிறு­வனம் தாக்கல் செய்­தது.

எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்­விசஸ் தனியார் நிறு­வனம் தாக்கல் செய்த மேற்­படி வழக்கில் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக  சட்ட மா அதிபர்,  கூட்டுப் படை­களின் பிர­தானி அட்­மிரல் ஆர்.சி.விஜே­கு­ண­ரத்ன,  முன்னாள் கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் டீ.எப்.எல். சின்­னையா, கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் எஸ்.எஸ்.ரண­சிங்க ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். 

குறித்த வழக்கில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,  நாங்கள் சர்­வ­தேச கடலில் பய­ணிக்கும் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கிக்­கொண்டு அதற்கு தேவை­யான ஆயு­தங்கள் மற்றும் தோட்­டாக்­களை களஞ்­சி­யப்­ப­டுத்த சிறிய அள­வி­லான மிதக்கும் ஆயுத களஞ்­சியம் ஒன்­றி­னையும் நடத்தி வந்தோம்.

சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் பய­ணிக்கும் கப்­பல்­க­ளுக்கு கட லில் பாது­காப்பு வழங்­குதல் தொடர்பில் எமக்கு 14 வருட அனு­பவம் உள்­ளது.  எமது நிறு­வனம் 2011 ஆம் ஆண்டு நிறு­வப்­பட்­ட­துடன், நிலப்­ப­கு­தியில் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்டு வந்த ரக்னா லங்கா என்னும் நிறு­வ­னத்­திடம் இருந்து வாடகை அடிப்­ப­டையில் கடல் பாது­காப்­புக்கு தேவை­யான ஆயு­தங்கள், தோட்­டாக்­களை பெற்­றுக்­கொண்டோம். 

எனினும் பின்னர் ரக்னா லங்கா நிறு­வ­னமும் சர்­வ­தேச கடலில் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கும் பணியை ஆரம்­பித்­தது. ஐக்­கிய நாடு­களின் கொள்­கை­க­ளுக்கு அமை­வாக கடல் பாது­கா­ப்பு தொடர்பில் 'எஸ்.எஸ்.மஹ நுவர' என்னும் கப்­பலில் நடத்­தப்­பட்ட மிதக்கும் ஆயுத களஞ்­சியம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி கடற்­ப­டை­யி­னரால் காலி துறை­மு­கத்தில் கைது செய்­யப்­பட்­டது. 

அதன் பின்னர் நாம் முன்­னெ­டுத்த இந்த நட­வ­டிக்­கையை கடற்­படை பலாத்­கா­ர­மாக கைப்­பற்­றி­யது. இதனால் எமக்கு 240 கோடி ரூபாவுக்கும் அதிக நஷ்டம் விளைவிக்கப்பட்டுள்ளது. அதனால் எமக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டம் தொடர்பில் 500 கோடி ரூபாவை நஷ்டஈடாக பெற்றுத்தரவும் என அந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது.