(க.கிஷாந்தன்)

இலங்கையின் ரயில் சேவை வரலாற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நீராவி ரயில் கொழும்பிலிருந்து பதுளை வரை சென்றுள்ளது.

இலங்கையில் ரயில் சேவை அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகின்றன.  ரயில் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதால் இன்று இச் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டதோடு பல சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலில் பயணித்தனர்.

 மேலும் அட்டன் புகையிரத நிலையத்தில் குறித்த புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மேற்படி புகையிரதத்தை புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.