மொனராகலை - பல்லேவலை, சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட  பாடசாலை ஒன்றில் 16 மாணவர்கள்  திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்றில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 மாணவர்களும் 10 மாணவிகளும்  திடீர் சுகயீனம் சுகயீனமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக கொவிதுபுர பொலிஸாரால் சியாம்பலாண்டுவ பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் குறித்த சிரமதானப் பணிகளில்  கலந்து கொண்டதாக அப் பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்