கடு­மை­யான மன அழுத்தம் மார­டைப்பை போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்தும் அபாயம்.!

Published By: Robert

14 Nov, 2017 | 10:55 AM
image

கடு­மை­யான உணர்வு ரீதி­யான மன அழுத்­த­மா­னது  மார­டைப்பைப் போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்­து­வ­தாக  பிரித்­தா­னிய மருத்­துவ ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

 பிரித்­தா­னி­யாவில்  மேற்­படி உணர்வு ரீதி­யான மன அழுத்தப் பாதிப்பால் குறைந்­தது 3,000  க்கு மேற்­பட்ட வய­து­வந்­த­வர்கள்  இரு­தய பாதிப்­புக்­குள்­ளா­வ­தா­கவும் அந்தப் பாதிப்பு இரு­தய தசை­களை நிரந்­த­ர­மாக பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும்  அபெர்டீன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மருத்­துவ ஆய்­வா­ள­ர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அவர்­க­ளது ஆய்வின் முடி­வுகள் அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் அன­ஹெயிம் எனும் இடத்தில் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மாகி நாளை  புதன்­கி­ழமை நிறை­வ­டை­ய­வுள்ள   அமெ­ரிக்க இரு­தய சங்­கத்தின் விஞ்­ஞானக் கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ளன.

கடும் மன அழுத்­தத்­துக்­குள்­ளாகி இருதய பாதிப்பு ஏற்­பட்ட 37 பேரிடம் நீண்ட கால அடிப்­ப­டையில் இந்த ஆய்வு முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் போது அவர்­க­ளது இரு­த­யத்­தி­லான பாதிப்பு நிலை குறித்து அல்ட்ரா சவுண்ட் தொழில்­நுட்பம்,  எம்.ஆர்.ஐ. ஊடு­காட்டும் பரி­சோ­தனை என்­ப­வற்றை பயன்­ப­டுத்தி ஓழுங்கு முறை­யாக பரி­சோ­திக்­கப்­பட்­டது.

தமது ஆய்வில் கடு­மை­யான உணர்வு ரீதி­யான மன­அ­ழுத்­த­மா­னது இரு­த­யத்தில் நிரந்­த­ர­மாக பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வது கண்­ட­றி­யப்­பட்­ட­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்

கடும் உணர்வு ரீதி­யான பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்கள்  காலப்போக்கில் முழு­மை­யாக குண­ம­டைந்து விடு­வார்கள் என தவ­றாக கருதி அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு நீண்ட கால சிகிச்சை வழங்­கப்­ப­டு­வ­தில்லை என குற்­றஞ்­சாட்­டிய ஆய்­வா­ளர்கள்,  அவர்­க­ளுக்கு மார­டைப்பால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதே மருந்­துகள் வழங்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04