முன்னாள் ஜனாதிபதியின் ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத், நீல் பண்டார ஹப்புவின்ன மற்றும் பியதாச பலகே ஆகிய மூவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

காமினி செனரத், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர், பியதாச பலகே, சமுர்த்தியின் முன்னாள் ஆணையாளர் நீல் பண்டார ஹப்புவின்ன ஆகிய மூவரும் இன்று சட்டத்தரணிகளூடாக நீதிமன்றத்தில் ஆஜரான போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் போர்வையில் பொது சொத்துக்களை தவறாக கையாண்டதாக இவர்கள் மூவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.