மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வானவில்லும் இணையச் செய்தித்தளமான 'வணக்கம் மலேசியா'வும் இணைந்து ஏற்பாடு செய்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'பேசு தமிழா பேசு' எனும் அனைத்துலக பேச்சுப் போட்டி இலங்கையின் தலைநகரமான கொழும்பில்  நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

இளைஞர்களிடையே பேச்சாற்றலையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் உயரிய நோக்கில் உருவான 'பேசு தமிழா பேசு' போட்டி பின்னர் அனைத்துலக ரீதியில் புதிய பரிமாணத்தைப் பெற்று கடந்த ஆண்டில் சென்னையில் வெகுசிறப்பாக நடந்தேறியது. 

அந்த வகையில் இரண்டாவது அனைத்துலக 'பேசு தமிழா பேசு'  பேச்சுப் போட்டி உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்கும் இலங்கை மண்ணில் தமிழாய்ந்த மக்களின் முன்னனியில் கொழும்பு 7 நடா மண்டபம் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

பேச்சு போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருதி போட்டிக்கு சாருஜன் மெய்யழகன் இலங்கை, உமாபரன் மணிவேல் மலேசியா, நித்யா சைகன் மலேசியா, தமிழ்பரதன் தழிழ்காவலன் கவிதை இந்தியா ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களில்  இலங்கையின் கொழும்பு பலகலைகழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தையும் ஏனைய மூவரும் அடுத்த இடங்களை சமமாக பெற்றுக் கொண்டனர். வெற்றயீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள், நினைவு பரிசில்கள், பண பரிசில்களும் வழங்கபட்டது. 

இந்த பேச்சு போட்டியில் போட்டியாளர்கள் இக்கால பெண்கள் திருமணத்திற்கு கணவரை தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்வது பணத்தையா? கல்வியையா? பண்பையா? ஆழகையா? ஏன்ற தலைப்பில் நான்கு பேர் வாதிட்டனர். இவர்களில் பண்பு என்ற தலைப்பில் வாதிட்ட இலங்கையின் கண்டி பேராதனை பலகலைகழக மாணவன் முதலாம் இடத்தை பெற்றார். இவர் இந்தியாவில் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக தழிழர் மகா நாட்டில் கௌரவிக்கபடவும் உள்ளார். மேலும் இந்த போட்டிகளில் பங்கு பற்றிய 5 நாடுகளின் மாணவர்களும் அதிதிகளும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க இலங்கையின் தேசிய சகவாழ்வு கலந்துறையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலேசிய கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன்,   ஆஸ்ட்ரோ நிகழ்ச்சியின் நிர்வாக குழும இயக்குனர் டாக்டர் ராஜமணி செல்லமுத்து, உலக புகழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்தசாமி, முன்னால் பிரதி பொலஸ் மா அதிபர் அரசரத்தினம், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜெயா செல்வகுமார்  உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

அரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்கள் தமிழார்வலர்கள் பொது மக்கள் 5 நாடுகளைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.  இந்தப் பேச்சு போட்டி தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருந்தது. அதேவேளையில் உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்திற்கான ஆக்கப்பூர்வமான இலக்கினைக் கொண்டிருப்பதால் இந்தப் போட்டி இலங்கையில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப் நடைபெற்றமை ஒரு சிறப்பு அம்சமாகும்.