ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுமார் ரூ.400 கோடி செலவில் உருவாகி வரும் படம் `2.0'. 

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் படம் வருகிற ஜனவரி 25 ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

டீசர், டிரைலரும் தாமதமாகவே ரிலீஸ் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே படத்தின் ரிலீஸ் திகதி குறித்து வெளியான வதந்தியை தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மறுத்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.