திருகோணமலை மூதூர் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரொருவரின் வலையில் 190 கிலோ நிறையுடைய அதிசய மீனனொன்று பிடிபட்டுள்ளது.

இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள மீனானது வேலா மீனினத்தைச் சேர்ந்ததென மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மீன் இனம் கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவுக்கு குறித்த மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.