7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்

Published By: Priyatharshan

13 Nov, 2017 | 09:38 AM
image

ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்குண்டு 140 உயிரிழந்துள்ள நிலையில் 1000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் - ஈராக் எல்லையிலுள்ள ஹலாப்ஜா நகருக்கு அண்மையில் இன்று அதிகாலை 7.3 ரிச்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கத்தால் பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளதாக செய்திகய் தெரிவிக்கின்றன.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், டுபாய், இஸ்ரேல் ஆகிய நாடுகளையும் அதிரவைத்துள்ளது. 

கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுமார் 26,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்குச்சாவடியை ஆய்வு செய்த ராகுல் காந்தி

2024-05-20 17:31:33
news-image

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் முகமட்...

2024-05-20 12:18:50
news-image

காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையும்...

2024-05-20 11:56:30
news-image

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

2024-05-20 12:15:28
news-image

எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை

2024-05-20 09:15:16
news-image

மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

2024-05-20 08:32:25
news-image

ஹெலிக்கொப்டர் காணப்படும் பகுதியை சென்றடைந்துள்ளோம் -...

2024-05-20 08:15:42
news-image

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை...

2024-05-20 08:06:51
news-image

தப்பிரிஸ் நகரத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில்...

2024-05-20 07:40:01
news-image

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி...

2024-05-20 06:42:34
news-image

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் விபத்து சதி...

2024-05-20 06:21:49
news-image

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன-...

2024-05-20 06:09:00