வைத்தியர் அனுமதியின்றி போதையேறும் மாத்திரை வகையொன்றை விற்பனை செய்த மருந்தகமொன்று (பாமஷி ) தலவாக்கலை நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, நேற்று மாலை தலவாக்கலை அதிரடிப்படையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , குறித்த மருந்து வகை அப் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள மருந்தகத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுவரெலியா மருந்து கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.