அமைச்சிக்கு சென்று ஒரு இலிகிதராக பணி புரிய என்னால் முடியாது. எனக்கு கொள்கை ஒன்று உள்ளது.  நான் இந் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்களின்  உரிமைகளுக்காக போராடுவேன் என்று கல்வி இராஜாங்க அமைச்சர்  வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கண்டி இங்து கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஷெரின் பிரைடல்  நிறுவனத்தில்  மணப்பெண் அலங்காரம் மற்றும் மனையியல் கல்வி தொடர்பான டிப்லோமா பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதல் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துதெரிவித்த அமைச்சர்,

இந்த அரசை ஆட்சியில் அமர்த்த நாங்கள் முக்கிய பங்காற்றியுள்ளோம். அவ்வாறு எங்கள் முயற்சியில் அமைந்த அரசாங்கம்  எங்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியையும் வழங்கி அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய முடியாத ஒரு நிலை காணப்பட்டால் அதனால் எதுவித பயனுமில்லை. அமைச்சிக்கு சென்று ஒரு இலிகிதராக பணி புரிய என்னால் முடியாது. எனக்கு கொள்கை ஒன்று உள்ளது.  நான் இந் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு தருமாறு தான் நான் கூறினேன்.  நல்லாட்சி அரசில் அவ்வாரான கருத்துகளையும் கூற இடமுண்டு. கடந்த அரசு காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் நான் இருந்த இடம்தெரியாது போகலாம். எனக்கு மட்டுமல்ல மற்றைய இராஜாங்க அமைச்சர்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன. நாங்கள் இது தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு அறிவித்துள்ளோம்.  தீர்வை பெற்றுத் தருவதாக கூறியபோதும் இன்னும் அத் தீர்வு கிடைக்க வில்லை.

சில ஊடகங்கலில் நான் அரசை விட்டு வெளியேறப் போவதாக செய்தி வெளிவந்துள்ளன. அது தவறான செய்தியாகும்’ நான் ஏன் அரசை விட்டு வெளியேற வேண்டும். நாங்கள் ஆட்சியில் அமர்த்திய அரசில் எமது பதவியை பாதுகாத்துக் கொண்டு மக்களின் உரிமைகளுக்காக போராடுதே எங்கள்  கொள்கையாகும். என்னை அரசில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் சிலர் இவ்வாறு கூறுவது தவறாகும். எங்களுக்கு கட்சி ஒன்று உள்ளது. அக் கட்சியில் இருந்து கொண்டு தான் பிரச்சனைகுள்க்கு தீர்வு தேடவேண்டும். இந்த அரசை கொண்டு வருவதற்கு தமிழ் கட்சிகளில் இருந்து முதலில் வெளியேறியவன் நான். மற்றவர்கள் அதன் பின்னர்தான் வெளியேறினார்கள். எனவே எனக்கு அரசை விட்டு வெளியேற எவ்விதத் தேவையும் இல்லை’ மக்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்பார்ப்பாகும். எதிர்வரும் தேர்தலில் நாங்கள் வேறு கட்சியுடன்  இணைவதா  அல்லது தனித்துபோட்டியிடுவதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.