யாழ். மாவட்­டத்தில் தொடர்ந்து பெய்­து­வரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபாய நிலை ஏற்­பட்டுள்­ளது. குடா­நாட்டில் ஏற்­படும் வெள்­ளப்­பெ­ருக்கை குறைப்­ப­தற்கு வச­தி­யாக தொண்­ட­ம­னாறு, அராலி, அரி­யாலை நாவற்­குழி பகு­தியில் உள்ள­வான் கத­வுகள் திறக்­கப்பட்­டுள்­ளன.

மழை வெள்ளம் சமுத்­தி­ரத்­துக்கு வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றது என தடுப்பு அணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி அறி­வித்­துள்ளார். யாழ். குடா­நாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்­புத்­தன்­மையை நீக்கி நன்னீர் ஏரி­யாக மாற்­று­வ­தற்கும் ஏரி­யுடன் சேர்ந்த கரை­யோ­ரப்­ப­கு­தியை மேய்ச்சல் நிலங்­க­ளா­கவும் பயிர்ச்­செய்­கைக்கு ஏற்ற நிலங்­க­ளா­கவும் மாற்­று­வ­தற்கு வச­தி­யா­கவும் சமுத்­தி­ரத்தின் உப்­புநீர் குடாக்­கடல் நீர் ஏரியில் உட்­பு­காமல் தடுப்­ப­தற்கும் வச­தி­யாக தடுப்பு அணைகள் அமைக்­கப்­பட்டு தடுப்பு அணையில் குடா­நாட்டின் மேல­தி­க­மான மழை­வெள்­ளத்தை சமுத்­தி­ரத்­துக்கு வெளி­யேற்­று­வ­தற்கு வான் ­க­த­வுகள் போடப்­பட்­டுள்­ளன.

தொண்­டை­மா­னாறு 34 வான் கத­வு­களும் அராலி 10 வான் கத­வு­களும் அரி­யாலை 42 வான் கத­வு­களும் நாவற்­கு­ழியில் 42 வான் கத­வு­களும் இணைப்புச் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தோடு நீண்­ட­கால நோக்­கோடும் கூடிய வேலைத்­திட்­ட­மாக குடாக்­கடல் நீரேரி வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்தத் தடுப்பு அணையில் தொண்­டை­மா­னாறு தடுப்­ப­ணை­யோடு தொடர்­பான அபி­வி­ருத்தி வேலைகள் தற்­போது 600 மில்­லியன் ரூபா செலவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

மழை தொடர்ந்து பெய்து வரு­வதால் வலி.­கி­ழக்கு கோப்பாய் பிர­தேச செய­ல­கப் ­பி­ரிவு மற்றும் நல்லூர் பிர­தேச செய­லகப் பிரிவு அரி­யா­லைப்­ப­குதி அரா­லிப்­ப­கு­தியில் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபா­ய­நிலை இருப்­ப­தாக அச்சம் தெரி­விக்­கப்­பட்­டது. குடாக்­கடல் நீரேரி தடுப்­பணை வேலை­திட்டம் மற்றும் பரா­ம­ரிப்பு வேலைகள் வடக்கு மாகாண நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

தடுப்பு அணை மற்றும் அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய வெள்­ளப்­பெ­ருக்கு தொடர்­பாக தடுப்­பணைக்குப் பொறுப்­பான உயர் அதி­காரி தகவல் தெரி­விக்­கையில்,

''தடுப்­ப­ணை­க­ளுக்கு மழை வெள்ள நீர் மட்டம் தொடர்­பாக நிர்ணயிக்­கப்­பட்ட அள­வுத்­திட்­டங்கள் உள்­ளன. இந்த அள­வுத்­திட்­டத்தை கருத்தில் கொண்டும் யாழ். மாவட்­டத்தின் தொடர்­மழை மற்றும் கால­நி­லையை கருத்தில் கொண்டும் கடந்த எட்டு தினங்­க­ளுக்கு முன்­னரே நான்கு தடுப்­ப­ணை­களில் இருந்தும் மழை வெ ள்ள நீரை சமுத்­தி­ரத்­திற்கு வெளி­யேற்­று­வ­தற்கு வசதியாக வான் கதவுகள் திறந்து விடப்-பட்டுள்ளன. எதிர்பார்த்தளவு மழை வெள்ளம் சமுத்திரத்துக்கு வெளி--யேறிக்கொண்டிருக்கிறது. குடா--நாட்டில் நீரேரி கரையோரக் கிரா-மங்-களுக்கு வெள்ளம் ஏற்படலாம் என எதிர்-வு-கூறப்-பட்ட வெள்ளப்பெருக்கு அபா-யம் தவிர்-க்-க-ப்பட்டுள்ளது'' எனத் தெரி-வித்-தார்.