வரவு, செலவுத் திட்ட  ஆலோ­ச­னை­க­ளின்­படி தொலை­பேசி  கோபு­ரங்­க­ளுக்­காக அற­வி­டப்­படும் வரி அதி­க­ரிக்­கப்­பட்­டதால் கைத்­தொ­லை­பேசி கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

தொலை­பேசி கோபு­ரங்­க­ளுக்­காக மாதாந்தம் இரண்டு லட்ச ரூபா வீதம்  அற­வி­டு­வ­தற்கு முன் வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளின்­படி சம்­பந்­தப்­பட்ட கைத்­தொ­லை­பேசி நிறு­வ­னங்கள் இந்த வரியை பாவ­னை­யா­ளர்கள் மீதே சுமத்தும் எனவும் , இதனால் கைத்­தொ­லை­பேசி கட்­ட­ணங்கள் அதி­க­ரிக்கும் எனவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. 

கைத்­தொ­லை­பேசி நிறு­வ­னங்கள் நாடு முழு­வதும் 11922 தொலை­பேசி கோபு­ரங்­களை நிர்­மா­ணித்­துள்­ளன. இதன்­படி இக் கோபு­ரங்­க­ளுக்­காக மாதாந்தம் 223கோடியே 84 இலட்சம் ரூபாவைச் செலுத்த வேண்­டி­யுள்­ளது. 

எனவே தொலை­பேசி நிறு­வ­னங்கள் இத்­தொ­கையை கைத்­தொ­லை­பேசி பாவ­னை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்தே அறி­வி­டு­மென்­பதால் கைத்­தொ­லை­பேசி கட்­ட­ணங்கள் வெகு­வாக அதி­க­ரிக்­க­லா­மென தெரிவிக்கப்படுகிறது.