இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் முதியவரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டி, அணுக்கன்ன பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் வைத்து 68 வயதான முதியவர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட முதியவரை குளியாப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த முதியவரை வழிமறித்து சோதனையிட்ட போதே, துப்பாக்கியுடன் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.