தங்காலை கடலில் மூழ்கி ஜேர்மனியர் பலி

By Devika

12 Nov, 2017 | 07:20 AM
image

கடலில் குளித்துக்கொண்டிருந்த ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் தங்காலையில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்றுள்ளது.

பலியானவரும், அவரது மனைவியும் தங்காலை, மெதில்லவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் குளிப்பதற்காக கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

குளித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக 55 வயதுடைய அந்த ஜேர்மனி நாட்டவர் கடலில் மூழ்கினார்.

உடனடியாகக் கடலில் குதித்த சிலர் அவரைக் கரை சேர்த்ததுடன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right