யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் கடவையில் 3 கோடி பெறுமதியான 70 தங்கக் கட்டிகளுடன் பெண் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ். பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் 7 கிலோ தங்கக்கட்டிகளுடன் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

குறித்த தங்கக்கட்டிகள் யாழ். ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்துவதற்காக கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

மாதகல் பகுதியைச் சேர்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவியே இவ்வாறு தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.