விசா நடைமுறைகளை மீறிய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் பத்தொன்பது பேரை இந்தோனேசிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

இந்தோனேசியாவின் போபோ நகரின் கிராமப் புறம் ஒன்றில் வசித்து வந்த நிலையிலேயே மேற்படி பத்தொன்பது பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். 

ஆரம்பகட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இந்தோனேசியா வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் வதிவிட விசாவிலேயே இந்தோனேசியா வந்திருப்பதாகவும், சட்டத்துக்கு முரணாக எதையும் தாம் செய்துவிடவில்லை என்றும் இலங்கையர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும், அவர்களின் கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்திருக்கும் இந்தோனேசிய பொலிஸார், அவர்கள் மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.