செம்மறி ஆடுகள் மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வேல்ஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த எட்டு செம்மறி ஆடுகளுக்கு திரைப்பட நடிகர் ஜேக் ஜில்லன்ஹாவ்ல், எம்மா வாட்ஸன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிபிசி செய்தி வாசிப்பாளர் பியோனா ப்ரூஸ் ஆகியோரது முகங்களை அடையாளம் கண்டுகொள்ள பயிற்சி கொடுத்துள்ளனர்.

குறித்த பயிற்சி நடவடிக்கைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடுகளின் முன்  எட்டு புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் நான்கு புகைப்படங்கள் பிரபலமான மனிதர்களுடையது, நான்கு புகைப்படங்கள் சாதாரண மனிதர்களுடையது.

செம்மறி ஆடுகளுக்கு தொடரந்து சில் நாட்களுக்கு பிரபலமான மனிதர்களை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு பிறகு செம்மறி ஆடுகள் பிரபலமற்றவர்களின் முகங்களைவிட பிரபலமானவர்களின் முகங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்  செம்மறி ஆடுகள் மனித குரங்குகள் போல சரியாக முகங்களை அடையாளம் கண்டுகொள்ள கூடியவை என்று இந்த ஆய்வின் முடிவில் கருத்து தெரிவித்துள்ளனர்.