15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த (21 வயது) இளை­ஞ­ரான முச்­சக்­க­ர­வண்டி சார­தியை பிணையில் செல்ல அனு­ம­தித்த கண்டி நீதி­மன்ற நீதிவான் விசா­ர­ணையை பிறி­தொரு தினத்­திற்கு ஒத்­தி­வைத்தார். 

தலாத்து ஓயா பொலி­ஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர். 

தலாத்து ஓயா பொலிஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த முச்­சக்­கர வண்­டி­சா­ரதி 15 வயது சிறுமி ஒரு­வ­ருடன் நீண்­ட­கா­ல­மாக காதல் கொண்­டி­ருந்­துள்ளார். 

இரு­வரும் மிக நெருக்­க­மாக பழ­கி­வந்த நிலையில் அண்­மையில் முத்­து­கெ­லி­யாவ வாவி பகு­தியை பார்­வை­யிட சென்­றி­ருந்த போது முச்­சக்­க­ர­வண்டி சார­தி­யான இளைஞர் சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­யுள்ளார். 

இச்­சம்­பவம் குறித்து சிறு­மியின் பெற்றோர் சில தினங்­க­ளுக்கு முன்னர் தலாத்து ஓயா பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­திருந்தனர். இதனையடுத்து பொலிஸார் சந்­தேக நபரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போதே நீதிவான் சந்­தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித் தார்.