புதிய தோலை விருத்தி செய்து பொருத்தி சிறு­வ­னது உயிரை காப்­பாற்­றிய மருத்­து­வர்கள்

Published By: Priyatharshan

10 Nov, 2017 | 11:35 AM
image

பாரம்­ப­ரிய ரீதி­யான குறை­பாடு கார­ண­மாக  தோல் பாதிப்­பொன்­றுக்­குள்­ளாகி உயி­ருக்குப் போராடிக் கொண்­டி­ருந்த 7  வயது சிறுவன் ஒரு­வ­னது உயிரை மருத்­து­வர்கள் அவ­னுக்­காக புதிய தோலை விருத்தி செய்து பொருத்தி காப்­பாற்­றி­யுள்­ளனர்.

தோல் வண்­ணத்துப் பூச்­சி­களின் இற க்கை போன்று  சேத­ம­டை­யக்­ கூ­டிய 'வண்­ணத்­துப்­பூச்சி நோய்' என அழைக்­கப்­படும் பாதிப்பால் தனது உட­லி­லுள்ள தோலில் 80  சத­வீ­தத்தை இழந்து உயி­ரா­பத்­தான கோமா மயக்கத்திற்குச் செல்லும் நிலைக்குத் தள்­ளப்­பட்ட ஹஸன் என்ற சிறு­வ­னுக்கே மேற்­படி முன்­னோடி சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

சிரி­யாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட அந்த சிறுவன் ஜேர்­ம­னியில் தற்­போது வசித்து வரு­கிறான். 

இந்­நி­லையில் அவ­னது உயிரைக் காப்­பாற்ற  போரா­டிய மருத்­து­வர்கள் அவ­னது உடலில் பாதிக்­கப்­ப­டாத தோல் பகு­தி­யொன்றை எடுத்து அந்தத் தோல் பகு­தி­யி­லி­ருந்த பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மர­ப­ணுவில் சீராக்­கத்தை மேற்­கொள்ள அதனை இத்­தா­லிக்கு அனுப்பி வைத்­தனர்.

இத­னை­ய­டுத்து   இத்­தா­லிய ஆய்­வு­கூ­டத்தில் புதி­தாக விருத்தி செய்­யப்­பட்ட சீர­மைக்­கப்­பட்ட  தோலை அந்த  சிறு­வ­னு க்கு பொருத்­து­வ­தற்கு 2015  ஆம் ஆண் டில் அவ­னுக்கு இரு அறுவைச் சிகிச்­சை கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

தற்­போது இந்த அறுவைச் சிகிச்­சைகள் இடம்­பெற்று இரு வரு­டங்­க­ளா­கின்ற நிலையில், ஹஸன்  தோலில் ஏற்­பட்ட பாதிப்பு முற்­றாக நீங்கி  குண­ம­டைந்­துள்­ள­தாக  அவ­னுக்கு சிகிச்­சை­ய­ளித்த மருத்­து­வர்கள் அறி­வித்­துள்­ளனர்.

ஹஸன் தற்போது தனது  நண்பர்களுடன்  இணைந்து கால்பந்தாட்டம் உள்ளடங்க லான விளையாட்டுகளை எவ்வித சிரமமு மின்றி விளையாடி வருவதாகத்  தெரிவிக் கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52