இலங்கைக் கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்தும் பொறுப்பை சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க ஏற்­றுக்­கொள்வார் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இருந்த கிரஹம் போர்ட், அண்­மையில் இரா­ஜி­னாமா செய்து சொந்த நாட்­டுக்கு திரும்­பினார். இந்­நி­லையில் இலங்கை அணியின் களத்­த­டுப்பு பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்டு வந்த நிக் போதஸ் இடைக்­கால தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

தற்­போது இலங்கை அணி கடும் பின்­ன­டைவை சந்­தித்து வரும் நிலையில் தலைமைப் பயிற்­சி­யாளர் ஒரு­வரை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் தேடிக்­கொண்­டி­ருந்­தது. இந்­நி­லையில் தலைமைப் பயிற்சிப் பொறுப்பை ஏற்க அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் வீரர்கள் 

இருவர் விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அந்தப் பட்­டியலில் இந்­தி­யாவின் முன்னாள் பயிற்­சி­யாளர் அனில் கும்ப்­ளேயும் இருந்­ததாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனாலும் பங்­க­ளாதேஷ் அணியின் வீரிய வளர்ச்­சிக்கு கார­ண­மான இலங்கை

அணியின் முன்னாள் வீர­ரான ஹத்­து­ரு­சிங்க பயிற்­சி­யா­ள­ராக வரு­வ­தையே அனை­வரும் விரும்­பினர். அந்­த­வ­கையில்

தற்­போது சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இலங் கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் பொறுப்பை ஏற்­கலாம் என்று தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

பங்­க­ளா­தேஷின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக உள்ள அவர் அந்தப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான இரா­ஜி­னாமா கடி­தத்தை கொடுத்­து­விட்­ட­தாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து இலங்கை அணியை மீட்டெடுக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.