இலங்­கைக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொட­ருக்கு இந்­திய அணி­யி­லி­ருந்து டோனியை நீக்­கி­விட்டு வேறு ஒரு­வ­ருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்­டக்­காரர் ஆகாஷ் சோப்ரா வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நியூ­ஸி­லாந்துக்கு எதி­ரான 2ஆ-வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் இந்­திய அணி தோற்­றது தொடர்­பாக டோனி விமர்­ச­னத்­துக்கு உள்­ளானார்.

மிகப்­பெ­ரிய இலக்கு இருக்கும் போது அவர் அதி­ர­டி­யான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­த­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இதனால் இரு­ப­துக்கு 20 போட்­டியில் இருந்து டோனி விலகி இளம் வீரர்­க­ளுக்கு வழி­விடவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்­சு­மணன், அகார்கர் ஆகியோர் விமர்­சித்­தி­ருந்­தனர்.

இந்த நிலையில் இலங்­கைக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 தொட­ரி­லி­ருந்து டோனியை நீக்­கி­விட்டு வேறு ஒரு­வ­ருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்­டக்­காரர் ஆகாஷ் சோப்ரா வலி­யு­றுத்­தி­யுள்ளார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான தொடர் முடிந்­து­விட்­டது. அடுத்து இலங்­கை­யுடன் இந்­திய அணி விளை­யா­டு­கி­றது. அந்த அணி உயர்­மட்ட அளவில் சம­நி­லை­யான அணி அல்ல. நாம் வாய்ப்­பு­களை பெறலாம்.

ஆனால் இந்த தொட­ருக்கு பிறகு வலி­மை­யான தென்­னா­பி­ரிக்­கா­வுடன் விளை­யா­டு­கிறோம் என்­பதை மனதில் கொள்ள வேண்டும். இதில் கடி­ன­மாக போராட வேண்­டி இருக்கும்.

இதனால் இலங்­கைக்கு எதி­ரான தொடரில் டோனிக்கு பதி­லாக வேறு ஒரு­வ­ருக்கு வாய்ப்பு கொடுக்­கலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டோனி வி‌டயத்தில் விதிமீறல் நடந்துள்ளது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.