இந்­தியாவின் ராஜஸ்தான் மாநி­லத்தின் ஜெய்ப்பூர் மாவட்­டத்தில் நடை­பெற்ற உள்ளூர் கிரிக்­கெட்டில் எதிர் அணிக்கு ஓட்­ட­மேதும் கொடுக்­காமல் 10 விக்­கெட்­டு­க்க­ளையும் ஒரு சிறுவன் வீழ்த்­தி­யது அனை­வ­ரி­டமும் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்­டத்தில் பாவர் சிங் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி நடை­பெற்­றது. இந்த போட்­டியில் கிரிக்கெட் அகா­ட­மியைச் சேர்ந்த இரு அணிகள் மோதின.

முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய திஷா கிரிக்கெட் அகா­டமி அணி 20 ஓவர்­களில் 156 ஓட்­டங்­களைப் பெற்­றது. இரண்­டா­வதாக துடுப்­பெ­டுத்­தா­டிய பியர்ல் அகா­டமி அணி 36 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. திஷா அணியின் வீர­ரான ஆகாஷ் சவுத்ரி ஓட்­ட­மேதும் விட்­டுக்­கொ­டுக்­காமல் 10 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

ஆகாஷ் தனது முதல் மூன்று ஓவர்­களில் தலா இரண்டு விக்­கெட்டுக்களை வீழ்த்­தினார். கடைசி ஓவரில் ஹெட்ரிக் விக்­கெட்­டுடன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்­தினார். மொத்­த­மாக தான் வீசிய 4 ஓவர்­களில் எதிர் அணிக்கு எந்த ஓட்­டமும் விட்­டுக்­கொ­டுக்­காமல் 10 விக்­கெட்­டு­க்க­ளையும் மொத்­த­மாக அள்­ளினார். ஆகாஷின் அதிரடியான ஆட்டம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.