பின்­க­தவால் வந்­த­வர்கள் பொலிஸ் அதி­கா­ரி­க­ளாக செயற்­பட முடி­யாது

Published By: Digital Desk 7

10 Nov, 2017 | 02:44 PM
image

விஷ­மத்­த­ன­மாக செயற்­படும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் சிலர் உள்­ளனர். அவர்கள் தொடர்பில் மிக விரைவில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். பொலிஸ் அதி­கா­ரிகள் சிலரின் தவ­றான செயற்­பா­டுகள் கார­ண­மாக இன்று பொலிஸ் திணைக்­களம் கடும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே பொலிஸை சுத்­தப்­ப­டுத்த வேண்­டிய காலம் மலர்ந்­துள்­ளது. பின்­க­தவால் வந்து அர­சியல் பலத்­தினால் பொலிஸ் நிலைய  பொறுப்­ப­தி­கா­ரி­க­ளாக கட­மை­யாற்­று­வோ­ருக்கு இனி அந்த பத­வியில் நீடிக்க முடி­யாது  என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்தார்.

பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே பொலிஸ் மா அதிபர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­களை நிய­மிப்­பது மற்றும் இட­மாற்றம் செய்­வது, பதவி உயர்த்­து­வது தொடர்பில் திறமை அடிப்­ப­டை­யி­லான புள்­ளித்­திட்டம் ஒன்று நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

இன்று பொலிஸ் சேவை­யா­னது சில தவ­றான அதி­கா­ரிகள் கார­ண­மாக சாதா­ரண மக்­களின் விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் பொலிஸை சுத்­தப்­ப­டுத்த வேண்­டிய காலம் மலர்ந்­துள்­ளது. அதன்­படி முதலில் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­பட்டு அங்­கி­ருந்து சுத்­த­ப்ப­டுத்தல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

50 வீத­மான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் சிறந்த அதி­கா­ரி­க­ளா­கவே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.  இன்னும் 50 வீத­மானோர் தொடர்பில் சுத்­தப்­ப­டுத்தல் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. பின் கத­வு­களால் வந்து அர­சியல் பலத்தின் உத­வி­யுடன் அப்­ப­த­வி­களில் அமர்ந்­தி­ருப்­போ­ருக்கு இனியும் அந்த பத­வி­களில் நீடித்­தி­ருக்க முடி­யாது.

அதேபோன்று விஷ­மத்­த­ன­மாக செயற் படும் சில உதவி பொலிஸ் அத்தி யட் சர்களும் உள்ளனர். அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் உள்ளது. அவ்வாறு மாறவில்லையெனில் அவர்க ளுக்கு எதிராக மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54