”யுக யுக ஹத ரெந்தி கீ” இன்னிசை நிகழ்வு ஜனாதிபதி தலமையில்

வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு உதவி புரிவதற்கான நிதியம் ஒன்றை தாபிக்கும் நோக்கில் இலங்கை பாடகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”யுக யுக ஹத ரெந்தி கீ” இன்னிசை நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது பிரசித்தி பெற்ற பல பாடகர்கள் பாடல்களை இசைத்ததுடன் பண்டித் அமரதேவ உள்ளிட்ட 50 ஆம் தசாப்தத்தின் பாடகர்களுடன் இணைந்து ஜனாதிபதியும் இதன்போது பாடல் இசைத்தமை ஒரு முக்கிய நிகழ்வாக காணப்பட்டது.