ஜப்பான் நாட்டில் பணத்திற்காக  ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி  என்ற பெண்ணுக்கே  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார்.

நான்காவது நபரிடம் தனது கைவரிசையை காட்ட முயற்சிக்கும் வேளையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

குறித்த பெண் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஏழு நபர்களை காதலித்து உள்ளார். தற்போது அந்த 7 காதலர்களும் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை.

காதலர்களின் பணத்தை சொந்தமாக்கிய பின்னர்  குறித்த 7 காதலர்களையும்  விஷம் கொடுத்துக் கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறத்த பெண்னை அந் நாட்டு மக்கள் கறுப்பு விதவை என அறிமுகப்படுத்துகின்றனர்.இவர்  இதுவரை நான்கு முறை திருமணம் செய்துள்ளார்.

சுமார் 6.6 மில்லியன் பவுண்ட் தொகை அளவுக்கு காதலர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மூன்று கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள இவர் வெகுவிரைவில் தூக்கிலிடப்படுவார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.