நிதி அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படும் முதலாவதும் நல்லாட்சி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 3 ஆவதுமான 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்றும் சற்று நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்படி நிதி அமைச்சரின் உரை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

சுதந்திர இலங்கையில் 71 ஆவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். இதேபோன்று நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவுசெலவுத்திட்டமும் ஆகும். 

நிதியமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். 

இந்த வரவுசெலவுத்திட்டத்தில் நாட்டின் அபிவிருத்தியை போன்று இளைஞர் மற்றும் மகளிர் சமூகத்தின் மேம்பாட்டினை முன்னிலைப்படுத்தியதான முன்மொழிவுகள் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நிமியமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

வரவு செலவுத்திட்டத்தின் மீதான 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகின்றது. இது 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்மீதான வாக்கெடுப்பு 16 ஆம் திகதி மாலை இடம்பெறும். 

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதம் இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறும். வரவுசெலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.