கொழும்பு காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

சுதந்திரதின ஒத்திகை நிகழ்வுகள் காலி முகத்திடலில் இடம்பெற்று வருவதால் குறித்த வாகன நெரிசல் காலி வீதியின் வெள்ளவத்தை முதல் கொழும்பு புறக்கோட்டை வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.