ஒரு இனத்தின் அடை­யா­ளத்தை சிதைக்கும் வகையில் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின் பெயர் நீக்­கப்­பட்­டுள்­ளது. அமை­தி­யான மலை­ய­கத்தில் குழப்­பத்தை உரு­வாக்கும் வகை­யி­லேயே இந்த செயற்­பாடு காணப்­ப­டு­கின்­றது என தெரி­வித்­துள்ள இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், நீக்­கப்­பட்ட சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின் பெயர் மீண்டும் உள்­வாங்­கப்­ப­டா­விட்டால் நிலைமை மோச­மாகும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளது. 

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. 

இதன்போது உரை­யாற்­றிய அக்­கட்­சியின் ஊடகப் பேச்சாளர் கண­பதி கன­கராஜ் கூறு­கையில்,

இலங்கை வாழ் இந்­திய வம்­சா­வளி மக்­களை அவ­ம­திக்கும் வகையில் தற்­போ­தைய அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. நாட்டின் சிரேஷ்ட தலை­வர்­களில் ஓரு­வ­ரான சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின்  பெயரை நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு இனத்தின் அடை­யா­ளத்தை சிதைக்கும் வகை­யி­லேயே இந்த செயற்­பாடு காணப்­ப­டு­கின்­ றது. 

நோர்வே அர­சாங்­கத்தின் நிதி உத­வி­யுடன் ஸ்தாபிக்­கப்­பட்ட ஹட்டன் தொண்­டமான் தொழிற்­ ப­யிற்சி நிலையம், நோர்வூட் தொண்­டமான் மைதானம் மற்றும் ரம்­பொட தொண்­டமான் கலா­சார நிலையம் ஆகி­ய­வற்றின் பெயர்கள் மாற்­றப்­பட்­டுள்­ளன. இதனை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். தேசிய அளவில் மாத்­திரம் அல்ல, இந்­தியா உள்­ளிட்ட உலக நாடுகள் பல மூத்த தலைவர் தொண்­ட­மானின் பெயர் நீக்­கப்­பட்­டமை தொடர்பில் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளன. 

அர­சாங்­கத்தின் போக்கு சரி­யில்லை என்­ப­தையே இவ்­வா­றான செயற்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. அமை­தி­யாக உள்ள மலை­ய­கத்தில் குழப்­பத்தை உரு­வாக்க வேண்டாம். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் இந்த விட­யத்தில் தலை­யிட்டு நீக்­கப்­பட்ட பெயரை இருந்­தது போன்று அறி­விக்க வேண்டும். மலை­யக மக்­களை புறந் தள்ளும் வகை­யிலும்  அந்த இனத்தின் மூத்த தலை­வர்­களை கொச்­சைப்­ப­டுத்தும் வகை­யிலும் அர­சாங்கம் செயற்­பட்டால் அநா­வ­சி­ய­மான அமை­தி­யின்மை  மலை­ய­கத்தில் உரு­வாகும். 

நல்­லாட்­சியில் உள்ள சுய­நல அர­சி­யல்­வா­திகள் பெயர் நீக்கத்தின் பின்னணியில் உள்ளனர். அவர்களின் இனவிரோத செயற்பாடுகளை மக்கள் அவதானித்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த சுயநல அரசியல்வாதிகளுக்கு மக்கள் நிச்சயம் தண்டனை வழங்குவார்கள் என தெரிவித்தார்.