தெற்கு அதிவேகப் பாதையினூடாக மஹரகமவில் இருந்து காலி மற்றும் மாத்தறை நோக்கி புறப்படும் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

 

தெற்கு அதிவேகப் பாதையினூடாக செல்வதற்கு 10 பஸ்களுக்கு புதிதாக தற்காலிக வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யுமாறு கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.