தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறுவதற்கு முழுமையான ஆதரவை வழங்குங்கள்

Published By: Priyatharshan

09 Nov, 2017 | 10:33 AM
image

அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்  நிதான மான ஆக்கபூர்வமான முழுமையான ஆதரவு நல்குவாராக இருந்தால் தமிழ் மக்களின் சகல பிரச்சினைக ளுக்கும் தீர்வினை பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டி யுள்ளார். 

அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாடப்பிரச்சினைக்குரிய தீர்வுகளை கோராது இருக்க முடியாது என்பதை மூத்த அரசியல்வாதி இரா.சம்பந்தன் ஐயா ஏன் உணரவில்லை  என்று நாம் எம்.பி.  தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதலிளிக்கும் வகையில் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதவாது, 

ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல தீர்வு ஏற்பட வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். கடந்த 70 வருடங்களாக அவ்வாறான ஒரு தீர்வை பெறுவதற்கு தமிழ மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் கடுமையாக உழைத்து வந்திருக்கின்றன.

ஏனைய பிரச்சினைகள் உருவாகுவதற்கு அடிப்படைகாரணம், ஒரு அரசியல் தீர்வு ஏற்படாமையேயாகும். எனவே தான் அரசியல் தீர்வு விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டியது எமது பிரதானமான கடமையென்று நாங்கள் கருதுகின்றோம். அதன் மூலமாகத்தான் எமது மக்கள் பூரணமான சமாதானத்தையும் சமத்துவத்தையும் பெறமுடியும்.

ஏனைய விடயங்கள் தொடர்பில் நாங்கள் கவனம் எடுக்காமல் இருக்கின்றோம் என்று கூறுவது ஒரு பொறுப்பற்ற பேச்சாகும். உள்நாட்டில் அரசாங்கத்துடனும், பாராளுமன்றத்திலும், வெளிநாடுகளில் சர்வதேசத்துடனும், ஒவ்வொரு விடயங்கள் சம்பந்தமாகவும், கைதிகள் விவகாரம், காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலுடங  கடும் முயற்சி எடுத்து வந்திருக்கின்றோம். 

இந்த கருமங்கள் முறையான பாதையில் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இவை முழுமைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவெனில், துவேசவாதிகள், பெரும்பான்மை மக்கள் மத்தியிலும், இராணுவத்தினர் மத்தியிலும், இனத்துவேசத்தை கிளறுகின்றதன் விளைவாக ஏற்படுகின்ற தடைகளேயாகும்.

எம்மை விமர்சிப்பவர்கள் நியாயபூர்வமாக அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும், தங்களுடைய நிதானமான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்குவார்களாக இருந்தால் சகல பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.பொறுப்பற்ற பேச்சில் ஈடுபடாமல் அவ்விதமான ஆதரவை நல்கும்படியாக நாம் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56