பொலனறுவை, பராக்கிரம நீரேந்துப் பகுதியில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 126 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் கைப்பற்றினர்.

டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்தக் குளக்கட்டுப் பகுதியைச் சுத்தம் செய்த தோப்பாவெவ வித்தியாலய மாணவர்களே இந்த ரவைகளைக் கண்டுபிடித்தனர்.

இதுபற்றி மாணவர்கள் தெரிவித்ததையடுத்து, ஆசிரியர்கள் பொலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன்பேரில் அங்கு வந்த பொலிஸார் மேற்படி ரவைகளை மீட்டெடுத்தனர். ரி-56 ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய இந்த ரவைகள் துருப்பிடித்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.