தெஹிவளை, சஞ்சயபுரவில் பகுதியில் சற்று முன் வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டின் முதலாம் மாடியில் பெரும் தீ ஏற்பட்டுள்ளது. இதை அவதானித்த அயலவர்கள்,  தீயணைப்பு உத்தியோகத்தர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளதுடன் தீயணைப்பிலும் இறங்கினர். இதனால், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எரிந்த அந்த மாடியில் வாடகை  அடிப்படையில்  கொழும்பின் பிரதான வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞர்களே குடியிருந்ததாகவும், விபத்தின்போது ஒருவரும் அங்கிருக்கவில்லை என்பதால் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருகிறது.

எனினும், அவர்களது உடைமைகள் அனைத்தும் எரிந்து விட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைபேசிக்கு கொடுத்திருந்த மின் இணைப்பே விபத்துக்குக் காரணம் என்றும், மின்னழுத்தி முறையாக அணைத்து வைக்கப்படாததே காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

எனினும், உறுதியான காரணம் எதுவும் இதுவர தெரியவரவில்லை.