புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சைகள்

19 Nov, 2015 | 10:58 AM
image

புற்றுநோய் ஏற்பட்டுவிட்டாலே அதை ஒரு மரணதண்டனையாகக் கருதிய ஒரு காலம் முன்பிருந்தது. ஆனால் இப்பொழுது புற்றுநோய்க்கான மருந்துகள் மூலமான சத்திர சிகிச்சை மூலமானஇ கதிர்வீச்சு மூலமான சிகிச்சைகள் மிகவும் முன்னேறியிருக்கின்றன.

 

cancer

 

முன்னைய காலத்தில் ‘கீமோ தெரபி’ எனப்படும் மருந்துகள் மூலமான சிகிச்சையின்போது, இடைவிடாத காய்ச்சல், வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் குறைதல், வயிற்றுப் போக்கு ஏற்படுதல் இரத்த வாந்தி எடுத்தல் என அனேகமான பக்கவிளைவுகள் தோன்றின. ஆனால் இன்றைய மருந்துகளில் இது போன்ற பக்கவிளைவுகள் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் ‘மோனோகுலர் என்டிபொடி’ எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை மட்டும் குறிவைத்து அவற்றில் கட்டிகள் உருவாவதைத் தடுக்கக்கூடிய மருந்துகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

சத்திர சிகிச்சையைப் பொறுத்தளவில் முன்பு உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்றோ உறுப்புகளை அகற்றாமல் புற்று நோய்க் கட்டிகளை மட்டும் துல்லியமாக அகற்றக்கூடிய அளவுக்கு சிகிச்சைகள் வளர்ந்துவிட்டன. அப்படியே அகற்ற வேண்டி ஏற்பட்டாலும் உறுப்புகளை மாற்றிப் பொருத்தக்கூடிய அளவுக்கு புற்றுநோய் சிகிச்சைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

கதிர்வீச்சு சிகிச்சையைப் பொறுத்தளவில் முன்பு கையாளப்பட்ட கோபால்ட் எனும் கருவிக்குப் பதிலாக ‘லீனியர் எக்ஸிலரேட்டர்’ பயன்படுத்தப்படுகிறது.

அதிலும் ‘3டி’ எனும் ‘சி.டி.ஸ்கேனரு’டன் இணைத்துச் செய்யக்கூடிய சிகிச்சை ‘இமேஜ் கைடட் ரேடியேட்டர் தெரபி’ எனும் ஐ.எம்.ஆர்.டி. போன்ற கருவிகள் மூலம் புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் உறுப்பைச் சுற்றியுள்ள எந்தவொரு உறுப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடாவண்ணம் துல்லியமாக கதிர்வீச்சு வழங்கி கட்டிகளை அகற்றும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

இவையனைத்துக்கும் மேலாக, மருந்துகள், அறுவை சிகிச்சை  மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை - இம்மூன்றையும் இணைத்து ‘கம்பைன்ட் மொடாலிட்டி ட்ரீட்மன்ட்’ (கூட்டு சிகிச்சை முறை) வாயிலாக புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சைகளை தற்போது வழங்கக் கூடியதாயுள்ளது. இதை புற்றுநோய் சிகிச்சையில் கையாளப்படும் மிகப் பிந்திய முறையாகக் கொள்ளலாம்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40
news-image

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

2023-05-20 13:59:49
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7...

2023-05-20 14:00:24
news-image

காது… மூக்கு… தொண்டை… பிரச்சினைகள்

2023-05-19 14:36:24
news-image

நடைப்பயிற்சி நல்லது!

2023-05-19 13:00:50
news-image

சிறுநீர் காட்டும் உடல் ஆரோக்கியம்!

2023-05-19 12:43:45