மட்டக்களப்பில் ஆடுகளைக் கொள்ளையிட்ட குழுவினர் முச்சக்கர வண்டியுடன் கைதுசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு அமிர்தகழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த உயர் ரக ஆடுகள் இரண்டு நேற்று (7) கொள்ளையிடப்பட்டன. இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இந்த நிலையில் சீ.சீ.ரி.வி. கமராவில் பதிவாகியிருந்த கொள்ளைச் சம்பவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்ட ஆடுகளும், முச்சக்கர வண்டியொன்றும் மீட்கப்பட்டன.
மேலும், முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட சவளக்கடையை சேர்ந்த இருவரும் வெல்லாவெளியை சேர்ந்த ஒருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளையடுத்து இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு கூழாவடி பிரதான வீதியில் உள்ள கோழி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 29 கோழிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாகவுள்ள மின் குமிழ்கள் கழற்றப்பட்ட பின், நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM