அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் பள்ளி வகுப்பறை ஒன்றிற்குள் கார் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயல்பட்டு வரும் பாடசாலை ஒன்றின் ஆரம்ப நிலை வகுப்புகள் அமைந்துள்ள பகுதியில் தாறுமாறாக ஓட்டிச் சென்ற கார் வகுப்பறையின் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளது.

இதில் வகுப்பில் இருந்த 8 வயதான இரண்டு மாணவர்கள் உயிரிழந்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 மாணவிகள்  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  குறித்த 3 மாணவர்களது  நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அந் நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்திற்கு காரணமாக இருந்த காரை ஓட்டி வந்த 52 வயதான பெண்மணியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.