அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று பகல் வெளியிடப்பட்டதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பான அறிவிப்பை சம்பந்தப்பட்ட அமைச்சர் இன்று அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.