வடகொரியாவானது உலகளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அச்சுறுத்தலாக உள்ளது, இருப்பினும் வடகொரியாவிற்கு கடிவாளம் இடுவதில் கணிசமான முன்னேற்றத்தை நாம் கண்டுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

தென் கொரிய சியோல் நக­ருக்கு விஜயம் செய்­துள்ள ட்ரம்ப் அந்­நாட்டு ஜனா­தி­பதி மூன் ஜே இன்­னுடன் இணைந்து  ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே  இவ்­வாறு தெரி­வித்தார்.

அதே­ச­மயம் வட கொரியா முழு­மை­யான அணு­சக்தி வல்­ல­மையைப் பெறு­வதை நோக்கி  தொடர்ந்து செல்­லு­மாயின்,  அந்­நாட்­டுக்கு எதி­ராக முழு­மை­யான இரா­ணுவ பலத்தைப் பிர­யோ­கிக்க அமெ­ரிக்கா தயா­ரா­க­வுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

ஆனால் வட கொரியா  இது தொடர்பில் உடன்­ப­டிக்­கை­யொன்றை மேற்­கொள்ள பேச்­சு­ வார்த்தை மேசைக்கு வரு­மாயின் அது அந்­நாட்டு மக்­க­ளுக்கும் உலக மக்­க­ளுக்கும் நன்­மை­ய­ளிப்­ப­தாக அமையும் என ட்ரம்ப் மேலும் கூறினார்.

வட கொரியா உல­க­ளா­விய ரீதியில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டப்­படும் உலக அச்­சு­றுத்­த­லொன்­றா­க­வுள்­ள­தாக அவர்  குறிப்­பிட்டார். “நாம் வட கொரி­யாவைக் கையாள்­வதில் பெரு­ம­ளவு முன்­னேற்­றத்தை கண்­டுள்ளோம்.  இந்த விவ­கா­ரத்தில் சீன ஜனா­தி­பதி பெரும் உத­வி­யா­க­வுள்ளார்" என அவர் தெரி­வித்தார். ட்ரம்ப் ஜப்­பா­னுக்­கான சுற்றுப் பய­ணத்தை பூர்த்­தி­செய்­த­தை­ய­டுத்தே  தென் கொரி­யா­வுக்கு விஜயம் செய்­துள்­ளமை  குறிப்­பி­டத்­தக்­கது.

 ட்ரம்ப் முன்னர் கருத்து வெளி­யி­டு­கையில், தென் கொரியா, வட கொரி­யாவை திருப்­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் அமெ­ரிக்­கா­வுக்கும் தென் கொரி­யா­வுக்­கு­மி­டையில் மேற்­கொள்­ளப்­பட்ட சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை குறித்தும் அவர்  முன்னர்  கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென் கொரியாவுக்கான ட்ரம்பின் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் பல பிராந்தியங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.