பாகிஸ்தான் வேகப்­பந்து வீச்­சாளர் ஷோயப் அக்­தரை தான் எதிர்­கொண்­ட­தில்லை. இது தனக்கு அதிர்ஷ்­டமே என்று இந்­திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி அக்­தரைப் புகழ்ந்­த­தை­ய­டுத்து ஷோயப் அக்­தரும் விராட் கோஹ்­லியை புகழ்ந்து கருத்து வெளி­யிட்­டுள்ளார். 

'பிரேக்பாஸ்ட் வித் சம்­பியன்ஸ்' என்ற கலந்­து­ரை­யா­டலில் கோஹ்லி கூறும்­போது, நான் ஷோயப் அக்­தரை எதிர்­கொண்­ட­தில்லை. ஆனால் தம்­பு­ள்ளையில் அவர் ஆடிய போது நானும் ஆடினேன். நான் அவர் பந்துவீச்சை எதிர்­கொள்ள முடி­ய­வில்லை. நான் முன்­ன­மேயே ஆட்­ட­மி­ழந்து விட்டேன். ஆனால் அவர் பந்து வீசி­யதைப் பார்த்து அரண்டு போனேன், பிற்­கா­லத்தில் கூட அவர் அபா­ய­க­ர­மா­கவே வீசினார். அப்­போது நினைத்தேன் அவர் உச்­சத்தில் இருந்த போது துடுப்­பாட்ட வீரர்கள் அவரை எதிர்­கொள்ள விரும்­பி­யி­ருக்க மாட்­டார்கள் என்று என்றார்.

இதற்கு அக்தர் பதி­ல­ளிக்கும் வகையில் டுவிட்­டரில் பதி­விட்­டுள்ளார். கோஹ்லி துடுப்பெடுத்தாடும் போது நான் பந்து வீசா­தது நல்­லது என்று நினைக்­கிறேன். நகைச்­சுவை ஒருபுறம் இருக்­கட்டும், அவர் ஒரு சிறந்த வீரர். அவ­ருக்கு வீசு­வது நிச்சயமாக ஒரு நல்ல சவாலாக அமைந்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

கோஹ்லி குறிப்­பி­டு­வது 2010ஆம் ஆண்டு இலங்­கையில் நடை­பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டி என்­பது குறிப்பிடத்தக்கது.