நாட்டில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் தட்டுப்­பாடு தொடர்பில் பலத்த சந்­தேகம் ஏற்பட்­டுள்­ளது. எனவே, இது தொடர்பில் உண்மையை கண்­ட­றி­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் விசேட அறிக்­கை­யொன்றை பெற்­று­த­ரு­மாறு கோரி­யுள்ளார். 

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார  தெரி­வித்தார்.  

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை‍­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது பெரு­ம­ளவில் எரிப்­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அதி­கா­ரி­களின் அச­மந்தம் கார­ணமா? அல்­லது ஏதேனும் சதித்­திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தாக என்­பது தொடர்பில் மக்கள் மத்­தி­யிலும் அர­சாங்­கத்­திற்கும் பாரி­ய­ளவில் சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. 

இதன்­பி­ர­காரம் இது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விசேட அறிக்­கை­யொன்றை பெற்று தரு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை விடுத்­துள்ளார். 

எனவே இந்த அறிக்கை கிடைத்த பின்னர் அச­மந்த போக்கிற்கு காரணமானவர்கள்  அல்லது சதி திட்டத்திற்காக  செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.