லண்டனில் 7 இலட்சம் ரூபாய்க்கு  மது அருந்தியும்  போதை ஏறவில்லை என  நட்சத்திர விடுதி மீது சீன எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

லண்டனின் "வால்தாஸ் ஆம் ஸீ"  என்ற நட்சத்திர விடுதி விலையுயர்ந்த உயர் ரக  மது வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. இவ் விடுதியில் ஆரம்ப கட்ட மதுவின் விலை 2 இலட்சம் ரூபாவாகும்.

பணக்காரரான குறித்த சீன எழுத்தாளர் 1878 இல் தயாரிக்கப்பட்ட  பாரம்பரியமான மதுவை பல இடங்களிலும் தேடியுள்ளார் இறுதியில் லண்டனில் குறித்த நட்சத்திர விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார். அதன் விலை 7 இலட்சம்  ரூபாவாகும்.     

குறித்த சீன எழுத்தாளர் மது மொத்தத்தையும் விடிய விடிய குடித்தும் அவருக்கு போதை ஏறாமல் இருக்க ஆத்திரமடைந்த எழுத்தாளர்  தனக்கு போலியான மதுவை, அதிக விலைக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் குறித்த மதுவின் மீதியை சோதனையகத்தில் கொடுத்து சோதனை செய்ததில் அது போலியான மதுபானம் என உறுதியாகியுள்ளது.

தன்னிடம் 7 இலட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு போலியான மது வகையை தந்துள்ளனர் என நீதி மன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு குறித்த நட்சத்திர விடுதி நிர்வாகம் தங்களது வழக்கறிஞர்களின் மூலம்  எழுத்தாளரின் பணத்தை திருப்பி தருவதாக சமாதான பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர்.