அநுராதபுர நகர எல்லைக்குள் ஆயர் வேத மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில்  செய்து வந்த ஐந்து வீடுகளை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி அநுராதபுர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 25 இற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட 10 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

16 சோதனை பிடியாணைகளை பெற்றுக் கொண்டு குறித்த பகுதியை சுற்றிவளைக்க முயற்சித்தாலும் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த உரிமையாளர்களுக்கு தகவல் தெரிந்து குறித்த நிலையங்களை மூடிவிட்டனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுர நிவ் டவுன், தஹய்யாகம மற்றும் புபுதுபுர ஆகிய பிரதேசங்களில் உள்ள 3 மசாஜ் நிலையங்களையும் விடுதிகளையும் சுற்றி வளைத்து சோதனை செய்த போதே குறித்த 10 சந்தேகத்திற்கிடமான பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 10 பெண்களும் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுர பகுதியில் மட்டும் கடந்த சில மாதங்களில் மட்டும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வந்த 80இற்கும் அதிகமான பெண்களை செய்து நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக அநுராதபுர பொலிஸார் தகவல் தெரிவிக்கின்றனர்.