நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விநியோகம் குறிப்பாக பொற்றோலை வாகனங்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டுமென உத்தரவளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிருபமொன்று நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங் தெரிவித்தார்.

இதேவேளை, பெற்றோல் விநி­யோகம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை வழ­மைக்­குத்­தி­ரும்­ப­வுள்­ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவை­யான பத்­தா­யிரம் மெட்­ரிக்தொன் பெற்றோல் கையிருப்பில் உள்­ளது. எனினும் டீசல் விநி­யோ­கத்தில் எவ்­விதத் தட்­டுப்­பாடும் இல்லை.

எனவே டீசலை விநி­யோ­கிக்­காது பதுக்கும் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்­து­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் போத்­தல்கள் மற்றும் சிறிய பாத்­தி­ரங்­களில் பெற்றோல் விநி­யோ­கிப்­பதை தடுக்­க­வுள்­ளோம்  என்று பெற்­­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுண ரண­துங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.