மாது­லு­வாவே சோபித தேரரின் இரண்­டா­வது ஆண்டு நினைவு தின வைபவம் மற்றும் அன்­னா­ரது நினைவு தூபிக்­கான அடிக்கல் நாட்டும் வைபவம் நாளை எட்டாம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மி­சிங்க ஆகியோர் தலை­மையில் பத்­த­ர­முல்­லையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று திங்­கட்­கி­ழமை இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது.  இதன்­போது மாது­லு­வாவே சோபித தேரர் ஞாப­கார்த்த மன்­றத்தின் தலைவர் ரவி ஜய­வர்த்­தன தெரி­விக்­கையில், 

உலக வர­லாற்றில் காலத்­துக்கு காலம் ஒவ்­வொரு யுக புரு­ஷர்கள் தோன்றி வாழ்ந்து உன்­னத நிலையை அடைந்­தி­ருக்­கின்­றார்கள், அந்த வகையில் நாம் வாழ்ந்த காலத்தில் தனது பற்­பல சேவை­களால் இலங்கை மண்ணில் பேசப்­ப­டு­ப­வரே மாது­லு­வாவே சோபித தேரர். 

எம்­மி­ட­மி­ருந்து விடை­பெற்ற சோபித தேரர் ஓர் தேர­ராக இருந்த போதிலும்  மதத்­தையும் தாண்டி அளப்­ப­ரிய சமூக சேவை­களை ஆற்­றி­யுள்ளார்,. அது போன்றே புத்த சாச­னத்­துக்கு அவர் ஆற்­றிய சேவை­களை மறக்க இய­லாது.  இலங்கை அர­சி­ய­லிலும் அவ­ரது பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­தது. அவ­சி­ய­மான தரு­ணங்­களில் அன்­னா­ரது குரல் ஒலிக்கத் தவ­றி­ய­தில்லை. 

நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­களில் அவர் உட­ன­டி­யாக தலை­யிட்டு தீர்க்க முன்­வந்­தவர். அநு­ரா­த­பு­ரத்தில் மிகவும் பின்­தங்­கிய கிரா­ம­மான எலப்­பத்­க­மவை தனது சேவை­களால் முன்­னேற்­று­வித்­தவர். தனது இறுதி காலத்தில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நாட்­டுக்கு ஆபத்து என்­பதால் அதில் மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும் எனவும் தேர்தல் முறை­மை­யிலும் மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும் என்றும் அர­சியல் உயர்­மட்­டத்­தி­ன­ரி­டையே அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வந்­தவர் சோபித தேரர் ஆவார். 

எலப்­பத்­கம கிராம மக்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­று­விப்­பது கிரா­மத்தை அபி­வி­ருத்தி செய்­வது அங்கு பட்­ட­தா­ரி­களை உரு­வாக்கும் நோக்­குடன் செயற்­றி­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வது போன்ற சேவை­களை ஆற்றி வந்த நிலையில் அவர் எம்­மி­ட­மி­ருந்து விடை­பெற்றுச் சென்றார்.

அவர் முன்­கொண்டு சென்ற பணி­களை எமது மன்­றத்தின் ஊடாக நாம் நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றுவோம். அன்­னா­ரது  ஆண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு எலப்­பத்­க­மவில் 153 வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணி­களை செயற்­ப­டுத்தி வரு­கின்றோம். முன்­பள்ளி. நூல­க­சாலை வர்த்­தக மத்­திய நிலையம் போன்­ற­வ­னவும் எமது மன்­றத்­தினால் எதிர்­வரும் காலங்­களில் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­படும்.  அங்­குள்ள அசோக்­க­மாலா வித்­தி­யா­ல­யத்தை தேசிய பாட­சா­லை­யாக தர­மு­யர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.

மாது­லு­வாவே சோபித்த தேரரின் இரண்­டா­வது ஆண்டு நினைவு தின வைபவம் நாளை எட்டாம் திகதி பத்­த­ர­முல்லை அபே­கம ஜன­கலா கேந்­திர நிலை­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்ரமிசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அன்னாருடன் ஒன்றாக சேவைபுரிந்த பலர் இந் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.   

மேலும் நாளைய தினம் அன்னாரது நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது என்றார்.