இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த இரண்டு மாத காலத்­திற்குள் 1300 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.

வாழ்க்கைச் செல­வுக்­கான அமைச்­ச­ரவை உப­கு­ழுவின் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக  20 ஆயிரம் மெற்­றிக்தொன் அரிசி, இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அத்­தொகை முழு­வதும் சந்­தைக்கு விநி­யோ­கத்­திற்­கென அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரி­சியில் நாட்­ட­ரி­சி­யா­னது கிலோ­கிராம் 74ரூபா­வுக்கு விற்­கப்­பட்­டு­வ­ரு­வ­தோடு 25கிலோ­விற்கு மேற்­பட்ட அரி­சியை கொள்­வ­னவு செய்­ப­வ­ருக்கு கிலோகிராம் 73 ரூபா­விற்கு விற்­பனை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்ய முடி­வு­ செய்­யப்­பட்­டுள்ள 30ஆயிரம் மெற்­றிக்தொன் சம்பா அரி­சியில் 15ஆயிரம் மெற்­றிக்தொன் சம்­பா­வுக்­கான கட்­ட­ளைகள் அந்த நாட்­டுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தோடு இம்­மாத நடுப்­ப­கு­தியில் அந்த அரிசியானது நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த தொகை அரசி இறகுமதிக்கு அரசாங்கம் 926மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.